இரா.பாலசுந்தரம்-செய்தியாளர்,திருவாரூர்
வாசன் நகர் ஜோதி ஸ்வர்ண லிங்கேஸ்வரர் ஆலய முதலாம் ஆண்டு கும்பாபிஷேக தின விழா
திருவாரூர் வாசன் நகர் அருள்மிகு ஸ்ரீ மனோன்மணி அம்பாள் சமேத ஸ்ரீ ஜோதி ஸ்வர்ண லிங்கேஸ்வரர் (கற்கோவில்) ஆலய முதலாம் ஆண்டு கும்பாபிஷேக விழா இன்று காலை சிறப்பு ஹோமங்கள் பூஜைகளுடன் தொடங்கி பிற்பகல் கலசாபிஷேகமும், 108 சங்காபிஷேகம் நடைபெற்று
பின் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது.