அரியலூர் மாவட்டம், செந்துறை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தெற்கு ஒன்றியம் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா இன்று நடைபெற்றது. தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ஏற்பாட்டில் போக்குவரத்து துறை அமைச்சர்
சா.சி.சிவசங்கர் முன்னிலையில், திமுக சட்ட திட்ட திருத்தக்குழு இணை செயலாளர்
சுபா.சந்திரசேகர் தலைமையேற்று தண்ணீர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய செயலாளர் எழில்மாறன், மாவட்ட பிரதிநிதி கார்மேகம், மாவட்ட ஆதிதிராவிடர் நலப்பிரிவு அமைப்பாளர் ஆதி, இளங்கோவன்,செந்துறை கிளை செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் தர்பூசணி பழம் வெப்பத்தின் உஷ்ணத்தை போக்க பழ வகைகள் வழங்கி விழாவினை சிறப்பித்தனர்.

முன்னதாக போக்குவரத்து துறை அமைச்சருக்கு செந்துறை ஒன்றியத்தின் சார்பில் திமுக கட்சியினர் உற்சாக வரவழைப்பு அளித்தனர் அதனைத் தொடர்ந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்,

பின்னர் திமுக கட்சி அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கணினி தொழில் பயிற்சி மையத்தினை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்து எத்தனை பயிற்றுநர்கள் பயில உள்ளனர் என்பதனையும் மாணவர்களுக்கு பயிற்சியை நன்றாக முடிக்குமாறு அனைவரையும் வாழ்த்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *