சொந்த செலவில் தொகுதி முழுவதும் கொசு மருந்து அடிக்க ஏற்பாடு செய்துள்ளதாக அறிவிப்பு
புதுச்சேரி மாநிலம் உழவர்கரை சட்டமன்ற தொகுதி பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மாநில இணை செயலாளர் திருமதி லாவண்யா அவர்கள்
ரெட்டியார் பாளையம் ஜெயா நகர் முதல் தெரு இரண்டாவது தெரு மூன்றாவது தெரு மற்றும் ஆறாவது தெரு வரை மேலும் புதுநகர் அணைக்கரை வீதி முத்துமாரியம்மன் கோயில் ஏரிக்கரை அருகில் சாக்கடையில் இறங்கி தீவிர துப்புரவு பணி மேற் கொண்டார்.
அவரது தலைமையில் தலைமையில் கழக நிர்வாகிகள் அம்மா பேரவை செயலாளர் அண்ணா அம்மா பேரவை செயலாளர் பிரகாஷ், வர்த்தக அணி செயலாளர் தனவேலு, கழக நிர்வாகிகள் ஐயப்பன் குமார் முருகன் செல்வமணி அன்பழகன், மற்றும் மாலதி, ஷீலா ,ராணி,புஷ்பா,மேரி, சாந்தி முருகன் , பிரசாந்த் ராஜ் அன்பழகன் வீரா குமார் உள்பட பலர் கலந்து கொண்டு துப்புரவு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அணைக்கரை வீதியில் உள்ள மக்கள் கூறியதாவது
இந்த அணைக்கரை வீதி பகுதியில் கடந்த ஆறு மாதமாக யாரும் இங்கு வந்து சுத்தம் செய்யவில்லை தொகுதி எம்எல்ஏவும் வந்து பார்க்கவில்லை.கொசு உற்பத்தியாகி பொதுமக்களை பதம் பார்க்கிறது. இதனால் இங்கு உள்ள ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
கொச தொல்லையால் குழந்தைகள் பெரிதளவு பாதிக்கப்பட்டு, டெங்கு மலேரியா, போன்ற காய்ச்சல்களால் நோய்வாய் பட்டு மருத்துவமனையில் உள்ளனர்.எனவே இந்த பகுதியில் கொசு மருந்து அடித்து ஏழை மக்களை காப்பாற்ற வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணை செயலாளர் லாவண்யா அம்மா அவர்களை கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்
இது குறித்து கழக இணை செயலாளர் லாவண்யா அவர்கள் நமது நிருபரிடம் கூறியதாவது…
இந்தப் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டேன் சாக்கடை சுத்தம் செய்தேன். என்னுடன் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சுத்தம் செய்தார்கள். அணைக்கரை வீதி மற்றும் பல பகுதிகளில் நாளை என்னுடைய சொந்த செலவில் கொசு மருந்து அடித்துக் கொடுக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.