உத்தமளையத்தில் கா ள த்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயிலில் மாசி மகா தேரோட்டம் கொட்டும் மழையிலும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அமைந்துள்ளது காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோவிலில் மாசி மகா தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது கொட்டும் மழையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்

பணக்கார கடவுளான தெலுங்கானா மாநிலம் திருப்பதியில் அமைந்துள்ளது திருமலை வெங்கடாஜலபதி திருக்கோவில் இந்த கோவிலில் வருடம் முழுவதும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சென்று வருவார்கள் மேலும் திருப்பதி திருமலை சென்று வந்தால் வீட்டில் செல்வம் பொங்கி பணக்காரராக மாறி விடுவோம் என்பது ஏழை எளிய மக்களின் நம்பிக்கை. இதே போல திருப்பதி திருமலைக்குயடுத்து நமது தென் மாவட்டங்களான மக்களின் நன்மதிப்பைப் பெற்ற திருக்கோவில்தான் தென்காளகஸ்தி என்று அழைக்கப்படும் திருக்காளத்தீஸ்வரர் கோவில் என்பது பக்தர்களின் அதிக நம்பிக்கை நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருக்கோவிலில் திருமணங்கள் அனைத்து முகூர்த்த நாட்களிலும் திருமணம் நடந்து கொண்டே இருக்கும் இவ்வளவு சிறப்பு வாய்ந்த இக்கோயிலின் மாசி மகத் தேரோட்டத் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கியது தொடர்ந்து பத்து நாட்கள் பல்வேறு சமுதாய மக்களின் மண்டகப்படி சுவாமிகள் வீதி உலா மேளதாளத்துடன் வெகு சிறப்பாக நடைபெற்று வந்தது

இந்த திருக்கோவிலின் முக்கிய நிகழ்வாக தேரோட்டத்திற்காக சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது சிவாலய முழக்கங்களுடன் வாத்தியங்கள் இசைக்க அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன இதனை தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது காலை 5.15. மணிக்கு சுவாமியும் அம்பாளும் ரதம் ஏறினார்கள் காலை 10:15 மணிக்கு தேரோட்டம் துவங்கியது தேரை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் என் ராமகிருஷ்ணன் பி.டிஆர் விஜயராஜன் ஜமாத் கமிட்டி சார்பில் நத்தர் தக்கார் நாராயணி செயல் அலுவலர் ஜெயராமன் பேரூராட்சி மன்ற தலைவர் முகமது அப்துல் காசிம் பேரூராட்சி செயல் அலுவலர் கா சின்னச்சாமி பாண்டியன் ஆகியோர் தேரை வடம்பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர் இந்த தேரோட்ட விழாவில் மதுரை திண்டுக்கல் திருச்சி தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் கோகிலாபுரம் ராயப்பன்பட்டி ஆனமலையான் பட்டி அம்மாபட்டி குரும்பபட்டி மார்க்கையன்கோட்டை சின்னமனூர் மற்றும் இதனை சுற்றியுள்ள கிராம மக்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இந்த தேரோட்ட விழாவில் ராம்ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மேனேஜிங் டைரக்டர் கே ஆர் சௌந்தர்ராஜன் பள்ளி தாளாளர் கவிதா சௌந்தர்ராஜன் மோகன் கிளினிக் அதிபரும் டாக்டர்கள் ஆர்.மோகனசுந்தரம் மனோரமா மோகன் ஆர் எம் மணிகண்டன் பாத்திமா கிளினிக் அதிபர் இணை இயக்குனர் நல்ல பணிகள் ஓய்வு பெற்ற டாக்டரும் முன்னாள் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையின் இருதய நோய்கள் சர்க்கரை நோய்களுக்கு சிறப்பு மருத்துவர் டாக்டர் ஏ சையது சுல்தான் இப்ராஹிம் ராதா கிளினிக் அதிபரும் டாக்டருமான டாக்டர்கள் கே ஜி மணிவண்ணன் எம் கோபாலகிருஷ்ணன் ஏ பி அகமது பம்ப்ஸ் ஏபி கன்ஸ்ட்ரகஷன் ஸ் அரசு ஒப்பந்ததாரருமான ஏ பி அப்துல் சமது சகர்புதீன் தமிழ்நாடு வணிக சங்க பேரவை மாநிலத் துணைத் தலைவர் தொழிலதிபர் கே எஸ் பெருமாள் காயத்ரி மெட்ரிக் பெண்கள்மேல்நிலைப்பள்ளி மேனேஜிங் டைரக்டர் ஆர் விரியன் சுவாமி திமுக வடக்கு நகர செயலாளர் எம் சி வீரபாண்டியன் ஒன்பதாவது வார்டு நகர்மன்ற கவுன்சிலர் சுந்தரி வீரபாண்டியன் கம்பம் ஆனந்தம் பட்டு மஹால் அதிபர் பி ராமர் விஜயா பல் மருத்துவமனை டாக்டர்கள் ஆர் சுசி விஜயராஜ் கே நந்தினி தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவனத் தலைவரும் பாலமுத்தழகு குழும நிறுவனத்தின் அதிபருமான பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா தேனி மாவட்ட முன்னாள் அண்ணா திமுக செயலாளரும் முன்னாள் கம்பம்நகரத் தந்தையுமான டி டி சிவகுமார் வெங்கடேஸ்வரா பிளைவுட்ஸ் அதிபர் எஸ் கே வி சொக்கராஜா ஜெ.ஆர் குழும நிறுவனங்கள் அதிபரும் அரசு ஒப்பந்ததாரர் மாவட்ட திமுக அயலக அணி மாவட்ட அமைப்பாளர் கம்பம் புதுப்பட்டி தொழிலதிபர் கே எம் பி எல் ரவி விநாயக மெடிக்கல்ஸ் அதிபர் வி எம் ஆர் கே காய்கறி கடை அதிபர் வி எம் ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் ஹர ஹர மகாதேவா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த போது கருடன் வட்டமிட்டதை பார்த்த பக்தர்கள் பரவசமடைந்து ஹர ஹர மகாதேவா என்று கோஷமிட்டது உத்தமபாளையம் நகரையே அதிர வைத்தது தேரை வடம் பிடித்து இழுத்த முப்பது நிமிடங்களில் சாரல் மழை பெய்யத் தொடங்கி பின் கன மழையாக கொட்டியது

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் பரவசமாக தேரை வடம்பிடித்து இழுத்தார்கள் தேர் உத்தம பாளையத்தின் இதய பகுதிகளான கிழக்குரத வீதி தெற்கு ரத வீதி வடக்கு ரத வீதியாக கிழக்குரத வீதியில் தேர் நிலைக்கு வந்தது மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக கோட்டைமேட்டு பகுதியில் ஜமாத்தார்கள் சார்பில் தேரை வரவேற்று பேனர் வைத்தும் பள்ளிவாசல் முன்பாக பக்தர்களுக்கு இலவசமாக குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன பல்வேறு அமைப்புகள் சார்பில் தேரோடும் வீதிகளில் பிரசாதம் பக்தர்கள் தாகம் தீர்க்க நீர் மோர் வழங்கினார்கள் மதியம் 2.40 மணிக்கு துவங்கி மாலை 4:30 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது இந்த விழாவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏடிஎஸ் பி வினோ ஜி டிஎஸ்பிக்கள் செங்கோட்டு வேலன் பெரியசாமி சுரேஷ் ஆகியோர் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *