தென்காசி,
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் மாறாந்தை கிராமம் சமுதாய நலக்கூடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் மாறாந்தை கிராமம் சமுதாய நலக்கூடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்தாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து தரப்பு மக்களுக்கும் தமிழ்நாடு அரசின் அனைத்து திட்டங்களும் சென்றடைந்து பயனடைய வேண்டும் என அறிவுறுத்தியதன் அடிப்படையில் கிராமம் தோறும் மனுநீதி நாள் முகாம் உள்ளிட்ட பல்வேறு முகாம்கள் நடைபெற்று வருகிறது. அம்முகாமில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கி வருகிறார்கள்.
அதனடிப்படையில் இன்றைய தினம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களில் பல்வேறு கோரிக்கை மனுக்கள் ஏற்பு செய்யப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. மேலும், அரசுத்துறை அலுவலர்கள் அனைவரும் தங்கள் துறை சார்ந்த திட்டங்களை பொதுமக்கள் அறிந்திடும் வகையில் எடுத்துரைத்தார்கள். எனவே, பொதுமக்கள் அனைவரும் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள அனைத்து திட்டங்களையும் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்தார்.
இம்முகாமில் வருவாய்த் துறையின் மூலம் 106 பயனாளிகளுக்கு ரூ.1529 இலட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டா, (இரயத்துவாரி மனை நத்தம் பட்டாவிற்கான ஆணையினையும். தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் 03 பயனாளிகளுக்கு வெண்டை பரப்பு விரிவாக்கம் மற்றும் திசு வாழைகளையும், வேளாண்மைத்துறை மூலம் 03 பயனாளிகளுக்கு திரவ உயிர் உரம், திரவ இயற்கை உரம். சிறுதானிய நுண்ணூட்ட உரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார்.
முன்னதாக, தோட்டக்கலை துறை, வேளாண்மை துறை, சமூகநலத்துறை. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் பொதுமக்கள் அறிந்திடும் வகையில் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு பயனடைந்தார்கள்.
இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை போன்ற கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
இம்முகாமில், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திவ்யா மணிகண்டன், உதவி ஆணையர் (கலால்) ராமச்சந்திரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலர் அனிதா, துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) நம்பிராயர், ஆலங்குளம் வட்டாட்சியர் ஓசன்னா பெர்ணான்டோ. மாறாந்தை ஊராட்சி மன்ற தலைவர் மீனா சுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள். பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.