தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம் திருப்பூர் பைபாஸ் ரோட்டில் தாராபுரம் ஒன்றியம் திமுக இளைஞரணி சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது நிகழ்ச்சிக்கு தாராபுரம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சன் பாலு தலைமை தாங்கினார்.தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தனர்
இதில் தாராபுரம் திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் இல.பத்மநாபன், ஒன்றிய கழக செயலாளர் எஸ். வி. செந்தில் குமார், மாவட்ட வழக்கறிஞர் அணி செல்வராஜ், தாராபுரம் நகரக் கழக செயலாளர் முருகானந்தம், துணைச் செயலாளர் கமலக்கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் தனசேகர், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் சசிகுமார், மூலனூர் ஒன்றிய கழக செயலாளர் துரை தமிழரசு,பேரூர் கழக செயலாளர் மக்கள் தண்டபாணி,நாட்டுத்துரை,கோணப்பன்சாலை செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.