தாராபுரம்செய்தியாளர் பிரபு
9715328420
தாராபுரத்தில் கீழே கிடந்த பையில் 1 லட்சத்து 1-ஆயிரத்து 500 ரூபாயை காவல் நிலையத்தில் ஒப்படைத்த அரசு பேருந்து நடத்துனர்.
குவியும் பாராட்டு!…
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு பேருந்து நடத்துனராக பணியாற்றி வரும் சையது அப்துல் ஹக்கீம் என்பவர் நேற்று இரவு பணி முடிந்து தாராபுரம் போக்குவரத்து கிளையிலிருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார் இவர் தாராபுரம் பேருந்து நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தில் செல்லும் பொழுது கீழே பை ஒன்று கிடந்துள்ளது. அதனை எடுத்துப் பார்த்தபோது அதில் 1, லட்சத்து 1500 ரூபாய் பணம் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்தப் பையை பணத்துடன் எடுத்துச் சென்று தாராபுரம் காவல் நிலையத்தில் நடத்துனர் ஒப்படைத்தார்.
பணத்தை கண்டதும் உடனடியாக காவல்நிலையத்தில் ஒப்படைத்த நடத்துனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் பணத்தை தவறவிட்ட நபரிடம் பணத்தை காவல்துறையினர் விசாரணைக்குப் பிறகு உரிய நபரிடம் ஒப்படைத்தனர்.