தேசிய அளவிலான 45 வது மூத்தோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் கடந்த 04 ம் தேதி முதல் 09ம் தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அணி சார்பில் மதுரை மாநகர் செல்லூர் காவல்நிலைய தலைமை காவலர் ஜெயச்சந்திர பாண்டியன் 3000 மீட்டர் பலதடை ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கமும், 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டப்பந்தயம் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தய போட்டிகளில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களும், 100 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தய போட்டியில் வெண்கல பதக்கமும், மாநகர ஆயுதப்படையை சேர்ந்த பெண் முதல்நிலை காவலர் தங்கபெனிலா 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கமும், மதிச்சியம் போக்குவரத்து தலைமை காவலர் செந்தில்குமார் உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப்
பதக்கமும் வென்றனர்.
வெற்றிபெற்ற அனைவரையும் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன், நேரில் அழைத்து தனது பாராட்டுக் களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார். மாநகர காவல் துணை ஆணையர் (தெற்கு), காவல் துணை ஆணையர் (வடக்கு), காவல் துணை ஆணையர் (போக்குவரத்து ) ஆகியோர் உடனிருந்தனர்.