தாராபுரம் செய்தியாளர் பிரபு
9715328420
செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியை சார்ந்த 606 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாகளை வழங்கினார்.
திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியம், எல்லப்பாளையம்புதூர் ஊராட்சி, பங்காம்பாளையம் ஆர்.வி.எல். மஹாலில் நெழிலி, குருக்கம்பாளையம் ஆகிய கிராமங்களை சார்ந்த 606 பயனாளிகளுக்கு வருவாய்த்துறையின் சார்பில் இலவச வீட்டு மனைப்பட்டாகளை செய்தித்துறை அமைச்சர் .மு.பெ.சாமிநாதன் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் ஆகியேர் பயனாளிகளுக்கு வழங்கினார்.
அமைச்சர் சாமிநாதன் தெரிவித்ததாவது
நெழலி கிராமம் குக்கிராமம் பங்காம்பாளையம். இந்திராகாலணி, எல்லப்பாளையம்புதூர். நெழலி.கவுண்டம்பாளையம், பள்ளிபாளையம். புள்ளக்காளிபாளையம். செட்டிபாளையம், என்.காஞ்சிபுரம், வஞ்சிபாளையம் குருக்கபாளையம் ஆண்டிப்புதூர். ஒலப்பாளையம். தட்டாவலசு எல்லப்பாளையம் ஆகிய பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனைப் 606 பட்டா வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, திருப்பூர் மாவட்டம். குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நெழிலி கிராமத்தை சார்ந்த 40 பயனாளிகளுக்கு வருவாய்த்துறையின் சார்பில் நத்தம் இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், 55 பயனாளிகளுக்கு நத்தம் தூய சிட்டாகளையும், குருக்கம்பாளையம் பகுதியை சார்ந்த 08 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டக்களையும், 64 பயனாளிகளுக்கு நத்தம் தூய சிட்டாகளையும். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் நெழிலி எல்லப்பாளையம் கிராமத்தை சார்ந்த 367 பயனாளிகளுக்கு பிற்படுத்தப்பட்டோர் நத்தம் பட்டாக்களையும். ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் நெழிலி கிராமத்தை சார்ந்த 72 பயனாளிகளுக்கு இ-பட்டாகளையும் என மொத்தம் 606 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் க.கார்த்திகேயன், காங்கேயம் வட்டாட்சியர் மோகனன், முன்னாள் குண்டடம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் சிவ.செந்தில்குமார். முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் ராசு (எ) கிருஷ்ணசாமி மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.