
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பெரிய கருமலை குரூப்பிற்கு சொந்தமான பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து மாணவர்கள் நல சங்கம் என்ற ஒரு சமூக நல அமைப்பை ஏற்படுத்தி சங்க குடும்பத்தார்களின் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விஷேச நிகழ்வுகளிலும் தவறாமல் கலந்து கொண்டு வெகு சிறப்பாக செயலாற்றி வருகின்றார்
இந்நிலையில் பெரிய கருமலை முன்னாள் மாணவர்கள் நலச் சங்கம் என்ற பெயரில் முறையாக அரசு அனுமதியுடன் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பெயர் பலகை திறப்பு விழா சங்கத்தின் தலைவர் சக்திவேல் தலைமையில் நிர்வாகிகள் கே. மூர்த்தி த.அ.போ.கழகம், வன்னிய ராஜ் த. அ. போ. கழகம், நிருபர் ஐயப்பன் என்ற பெரியசாமி மற்றும் பலர் முன்னிலையில் கருமலை எஸ்டேட் பஜார் பகுதியில் நேற்று நடைபெற்றது அதைத்தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி வரும்சங்கத்தின் தலைவர் ஏ. சக்திவேல், துணைத் தலைவர், கே. அசோக் குமார், செயலாளர் ஐ.வேல்பாண்டி, இணைச் செயலாளர், கே.ஏ.குமார். பொருளாளர் வி. ஆர்த்தி பிரகாஷ் ஆகியோர்களின் பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்து தெரிவிக்கப்பட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது