காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரா கல்லூரியில் வணிகவியல் துறையின் சார்பாக கல்லூரி மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தும் போட்டிகள் “மார்க தர்ஷன்” -2025 என்ற தலைப்பில் அனைத்து கல்லூரி மாணவர்களும் பங்கு பெறும் வகையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக வணிகவியல் துறைத் தலைவர் திரு. M. வெங்கடேசன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
இவ்விழாவிற்கு ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுரியின் முதல்வர் முனைவர் கலை. இராம.வெங்கடேசன் அவர்கள் குத்து விளக்கேற்றி தலைமையுரை ஆற்றினார். வணிகவியல் துறை உதவி பேராசிரியர் முனைவர். A. தட்சிணாமூர்த்தி அவர்களின் சிறப்பு விருந்தினர் அறிமுக உரையைத் தொடர்ந்து லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் குரூப் நிறுவனத்தின் சீனியர் அனலிஸ்ட் திரு . K. ஈஸ்வரன் அவர்கள் மார்க தர்ஷன் – 2025 விழாவினை தொடங்கி வைத்து மாணவர்களின் முன்னேற்றம் மற்றும் சமுதாய நலன் மற்றும் பங்கு சந்தையில் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றி சிறப்புரையாற்றினார்.
15 க்கும் மேற்பட்ட கல்லுரிகளில் இருந்து பல்வேறு மாணவ மாணவிகள் இவ்விழாவில் கலந்து கொண்டது மட்டுமில்லாமல் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசுளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருவாரூர் மாவட்டம் மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கல்லூரி இயக்குனரும் சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் சிண்டிகேட் உறுப்பினர் Dr.S. இராமநாதன் அவர்கள் மாணவர்களிடையே ஊக்க உரையாற்றி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.
இவ்விழாவினை வணிகவியல் துறையில் பணியாற்றும் அனைத்து பேராசிரியர்கள் வழிநடத்தினர்.இறுதியாக வணிகவியல் துறை இணை பேராசிரியர் Dr . R. மாயக்கண்ணன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.