பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே நடுகடையில் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி….
விவசாயிகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு…
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே நடுக்கடையில் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சங்க மாநில துணை அமைப்பாளர் ரியாஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழக நலியுற்ற விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் முகமது இப்ராகிம், ஜும்ஆ பள்ளிவாசல் இமாம் அல்ஹாஃபிழ் அஸதுல்லாஹ் கௌஸி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.இதில் உலக அமைதி மற்றும் ஒற்றுமைக்காக சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டது.
நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் திருவையாறு வட்டாட்சியர் முருககுமார், வேளாண்மை துறை துணை இயக்குனர் ஐயம்பெருமாள், ஜமாத் தலைவர் ராஜ் முஹம்மது, மாநில செய்தி தொடர்பாளர் ஜீவானந்தம், மகேந்திரன் மற்றம் நடுக்கடையை சுற்றியுள்ள ஜமாத்தார்கள், பொதுமக்கள், சமூகஆர்வலர்கள், விவசாயிகள் , இமாம்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பிரார்த்தனையிலும் ஈடுபட்டு நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.