விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் நவமால்காப்பேர் கிராமத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் துணை செயலாளர் (கிழக்கு) கெங்கம்மாள் பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர் ஜி பி சுரேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கொடி ஏற்றி வைத்து மகளிர் மற்றும் மாணவ மணவியற்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கிளைகழக நிர்வாகிகள் பாஸ்கர், ரமேஷ், சச்சின், குணாளன், ராஜேஷ், மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் எழிலரசி, சங்கீதா, கவிதா, வளர்பிரியா, மற்றும் ஒன்றிய கிளைகழக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். மேலும் நிகழ்ச்சியில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.