பாரதி பாடலை தலை கீழாக பாடி அசத்தும் அமெரிக்கா வாழ் தமிழ் சிறுமி
60 மொழிகளுடன் கலந்து சிறுமி பாடியது சமூக வலைதளங்களில் வைரல்
சென்னை பாலாவாக்கம் பகுதியை சேர்ந்த கமல கண்ணன்,அனு தம்பதியரின் மகள் சிவாக்ஷா.அமெரிக்காவில் வசித்து வரும் கமலக்கண்ணன் தனது தாய்மொழியாம் தமிழ் மீது சிறுமி சிவாக்ஷாவுக்கு ஆர்வம் உள்ளதை கண்டறிந்துள்ளார்..
இந்நிலையில் சிறுமி பாரதியார் கவிதைகளை ஆர்வமுடன் படித்து அதில் புலமையும் பெற்றுள்ளார்..
இதனை தொடர்ந்து சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா என்ற பாரதி பாடலை தலைகீழாக பாடி பயிற்சி எடுத்த சிவாக்ஷா அதில் புதிய உலக சாதனையும் படைத்து அசத்தியுள்ளார்..
அதன் படி துபாய் நகரில் நடைபெற்ற உலக சாதனை நிகழ்வில் பங்கேற்ற சிறுமி சிவாக்ஷா பாரதி பாடலை 60 மொழிகளுடன் கலந்து தலைகீழாக ஒரு நிமிடம் 52 விநாடிகளில் பாடி ஐன்ஸ்டீன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்..
அமெரிக்க வாழ் சிறுமி தமிழ் பாடலை தலை கீழாக பாடிய இந்நிகழ்வு சமூக வலை தளங்களில் வைரலாகி உள்ளது குறிப்பிடதக்கது…