கரூர் செய்தியாளர் மரியான் பாபு

இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்று சிறப்பித்தார்.
கரூர் பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள ஈத்கா பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை அத்தார் ஜமாத் சின்ன பள்ளிவாசல் மற்றும் ஈத்கா பள்ளிவாசல் தலைவர் சையது ஜலால், செயலாளர் சபியுல்லாகான், கௌரவ தலைவர் சர்புதீன் ஹாஜியார், துணைத்தலைவர் பழக்கடை ஹனிபாபாய், பொருளாளர் தர்கா துபேல், புகழூர் ஹபீபுல்லாஆசாத், சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் முனைவர்ஜான், கரூர் மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் நவாஸ் கான், துணை அமைப்பாளர் செரிப் முஜிபுர் ரஹ்மான், திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் என் மணிராஜ் மேயர் கவிதா கணேசன், துணைமேயர் தாரணி சரவணன் முன்னிலை வகித்தனர்.துணைத் தலைவர் ஹக்கீம் பாவா தொகுப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் இத்தா நோன்பில் கலந்து கொண்டவர்களுடன் அமைச்சரும் நோன்பில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளிவாசலை சேர்ந்தவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.