இந்து சமய அறநிலையத்துறை உயர்நிலை ஆலோசனைக்குழு உறுப்பினராக சங்கரன்கோவில் ச‌.தங்கவேலு நியமனம்

தமிழ்நாடு முன்னாள் கைத்தறித்துறை அமைச்சரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், சங்கரன்கோவில் முன்னாள் நகர் மன்ற தலைவருமான ச.தங்கவேலு இந்து சமய அறநிலையத்துறை உயர்நிலை ஆலோசனை குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் சட்டம். 1959 சட்டப்பிரிவு 7(1)-இன் கீழ் மேற்கண்ட ஆலோசனைக் குழுவில் அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமனம் செய்யும் பொருட்டு, 15 ஆன்மிக மற்றும் சான்றோர் பெருமக்களை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலனை செய்தது. பரிசீலனைக்கு பின்னர், அதனை ஏற்று, ஏற்கெனவே அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழுவின் அலுவல்சாரா உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததால், 1959-ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 22/1959), பிரிவு 7(1)-ன்கீழ், கீழ்க்காணும் நபர்களை உள்ளடக்கிய ஆலோசனைக் குழுவினை நியமனம் செய்து அரசு ஆணையிடுகிறது‌

அதன்படி இந்து சமய அறநிலையத்துறை பதவி வழி
அலுவல் சார் உறுப்பினர் உறுப்பினர்களின் தலைவராக தமிழக முதலமைச்சரும், துணைத் தலைவராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் உறுப்பினராக அறநிலையத்துறை செயலாளரும், உறுப்பினர் மற்றும் செயலாளராக இந்து சமய அறநிலையத்துறை ஆணையரும், நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அலுவல் சாரா உயர்நிலை ஆலோசனை குழு உறுப்பினர்களாக
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஸ்ரீமத் வராக மகாதேசிகன், ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்,சீர்வளர் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், தருமபுரம் ஆதினம்,முனைவர் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்,தவத்திரு சிவஞான பாலய சுவமிகள், பொம்மபுரம் ஆதினம் மயிலம், சு.கி. சிவம்,முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார், ந. இராமசுப்பிரமணியன் தரணிபதி ராஜ்குமார், மல்லிகார்ஜீன் சந்தான கிருஷ்ணன்,
ஸ்ரீமதி சிவசங்கர், தேச மங்கையர் கரசி, சங்கரன்கோவில் ச.தங்கவேலு, கே.சந்திர மோகன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *