புதுச்சேரி வணிக நிறுவனங்கள், கடைகளின் பெயர் பலகை தமிழில் தான் இருக்க வேண்டும் என முதல்வர் ந.ரங்கசாமி அவர்களின் அறிவிப்புக்கு புதுவைத் தமிழ்ச் சங்கம் பாராட்டு….
புதுச்சேரி அரசு முதல்வர் மாண்புமிகு ந.ரங்கசாமி அவர்கள் தமிழுக்காகவும்,தமிழர்களின் நலனுக்காகவும் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை சிறப்பாக செய்து வரும் சூழலில் கலைமாமணி,தமிழ் மாமனி போன்ற விருதுகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்படாமல் இருந்து வந்த நிலையில் தற்போது விருதுகளை வழங்கி தமிழ் அறிஞர்களை பெருமைப்படுத்தி இருக்கிறார்.
மேலும் தமிழ்மாமனி விருதில் மேடைப்பேச்சு, கவிதை, கட்டுரை ஆய்வுகள் என்று பல தரப்பட்ட நிலைகளில் உள்ளவர்களுக்கும் விருது வழங்க வேண்டும் என்று சொல்லியிருப்பது பாராட்டுக்குரிய ஒன்றாகும். புதுவையில் உலகத்தமிழ் மாநாடு நடத்த இருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும்.
இம்மாநாடு மாண்புமிகு முதல்வர் ந.ரங்கசாமி ஐயா அவர்கள் தலைமையில் உலகத் தமிழர்கள் பாராட்டும் வகையில் இதனை நடத்திட வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.மேலும் புதுச்சேரி சட்டசபையில் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் பெயர்ப்பலைகைகள் தமிழில் தான் இருக்க வேண்டும் என்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ள முதல்வர் ந.ரங்கசாமி அவர்களை புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக பாராட்டுகளையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.