கோவை மாவட்டம் வால்பாறை – பொள்ளாச்சி சாலையில் உள்ள ஆலமரக்கோவில் அருகில் காட்டு மாடுகள் சாலையை கடக்கும் பகுதியில் சுரேஷ்குமார் (வயது சுமார் 51) த/பெ சின்னப்பன் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் நேற்று மாலை சுமார் 6.45 மணியளவில் வால்பாறை நோக்கி வரும் பொழுது காட்டு மாடு தாக்கி விழுந்ததில் அவரது இடது கால் முட்டி மற்றும் வலது புருவத்தின் மேற்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது

உடனே வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்

தகவலறிந்து மருத்துவமனைக்கு சென்ற சம்பந்தப்பட்ட வனத்துறையினர் காட்டு மாடு தாக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு வனத்துறை சார்பாக உடனடி நிவாரண தொகையாக ரூ. 5.ஆயிரம் வழங்கப்பட்டது மேலும் வால்பாறை – பொள்ளாச்சி சாலையில் காட்டு மாடுகள் சாலையை கடந்து செல்லும் பகுதிகளில் வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக செல்லவேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *