துறையூரில் தேமுதிக கிழக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் செல்லதுரை தலைமையில் -மனநலம் குன்றிய மாணவர்களுக்கு மதிய உணவு
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் தேசிய முற்போக்கு திராவிட கழக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தின் 56வது பிறந்தநாள் விழா அன்று,திருச்சி வடக்கு தேமுதிக மாவட்ட கழக செயலாளர் கே எஸ் குமார் ஆலோசனையின் பேரில் துறையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் செல்லதுரை தலைமையில் குட்டக்கரையில் உள்ள தி ஸ்பாஸ்டிக்ஸ் ஆஃப் திருச்சிராப்பள்ளி,துறையூர் கிளை மையத்தில் உள்ள மனம் நலம் குன்றிய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாணவர்கள் பள்ளி நிர்வாகிகள் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உடல் ஆரோக்கியத்துடன் நீடுழி வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறினர். இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் சங்கர் முன்னிலை வைத்தார்.
இதில் கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் செந்தில், கிழக்கு ஒன்றிய அவை தலைவர் முருகேசன், நகர அவை தலைவர் செல்வராஜ், பொருளாளர் முத்துக்குமார் மற்றும் காப்பக நிர்வாகி, ஆசிரியைகள் , மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்