பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்

பாபநாசத்தில் மறைந்த ஜி ஆர் மூப்பனார் 6 -ம் ஆண்டு நினைவு தினம்….
150 பேர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கபட்டது தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் கடைவீதியில் தமிழ் மாநில காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர் மறைந்த ஜி.ஆர்.மூப்பனார் 6-ம் ஆண்டு நினைவு தினம் நடைபெற்றது.
தஞ்சை மேற்கு மாவட்ட தலைவர் என்.கே.சேகர்.தலைமை வகித்து ஜி.ஆர்.மூப்பனார் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந்நிகழ்ச்சியில் 150 நபர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
பாபநாசம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும் பாபநாசம் தெற்கு வட்டாரத் தலைவருமான சேதுராமன், வடக்கு வட்டார தலைவர் விவேக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் ரவிச்சந்திரன், முருகராஜ், வடிவேல் , சுகன்யா சங்கர், சேகர், முருகவேலு, அறிவானந்தம், மற்றும் மாநில,மாவட்ட, வட்டார, நகர இளைஞரணி , மாணவரணி, மகளிர் அணி, சார்பணி நிர்வாகிகள் தொண்டர்கள் என பல கலந்து கொண்டனர்.
முடிவில் பாபநாசம் நகர தலைவர் பக்ருதீன் அலி அகமது நன்றி கூறினார்.