தாராபுரம் அருகே இறந்தவர்களை அடக்கம் செய்ய மயானக்கரை சுடுகாடு வேண்டி பொதுமக்கள் சாலை மறியல்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள முண்டுவேலம்பட்டி கிராமம், பாரதி நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட அருந்ததி சமூகத்தினர்
30-ஆண்டுகளுக்கும் மேல் வசித்து வருகின்றனர்.

பாரதி நகர் பகுதியில் இறந்தவர்களை அடக்கம் செய்ய மயானக்கரை (சுடுகாடு) வசதி இல்லை. அதனால் PAP வாய்க்கால் ஓரத்திலும், பஞ்சாயத்து ரோட்டுக்கு பக்கத்திலும் இறந்த பினங்களை அடக்கம் செய்து
வருகின்றனர்.

அப்பகுதியில் ரோட்டு வேலை செய்யும்பொழுது . ஜேசிபி இயந்திரத்தின் மூலம் குழிகள் பறிக்கும் போது அடக்கம் செய்யப்பட்ட சடலங்கள் மேலே தோண்டப்படுகின்றது.

அப்போது மனித மண்டையோடுகளும் மற்றும் எலும்புகளும் மேலே வந்து விடுகின்றன அதனைபஞ்சாயத்து நிர்வாகத்தினர் அப்படியே சாலை ஓரத்தில் போட்டு விட்டு சென்று விடுகின்றனர்.

இதனால் இந்தவர்களின் ஆத்மா சாந்தியடையாமல் பொதுமக்களை துன்புறுத்துகிறது. இது குறித்து கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் இடத்தில் பொதுமக்கள் நேரில் சென்று மனு கொடுத்தனர்.

பாரதி நகர் மக்களுக்கு தனி சுடுகாடு அமைத்து தரவேண்டும் என கோரிக்கை வைத்தும் அதனை அதிகாரிகள் அவர்களது கவனத்திற்கு எடுத்துக் கொள்ளவில்லை, இதனால் ஆத்திஅடைந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பொள்ளாச்சி- தாராபுரம் சாலை தாசர்பட்டி அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து அவரது ஊரான பாரதி நகர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு தங்களுக்கு தனி சுடுகாடு அமைத்து தர வேண்டும் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அவர்களிடம் குண்டடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சுடுகாடு அமைத்து தருவதற்கு நடவடிக்கை எடுத்து தரப்படும் என தெரிவித்தனர் அதனை தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர். இதனால் தாசர்பட்டி பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது மேலும் சுடுகாடு வேண்டி பொதுமக்கள் போராடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *