கோவை கே.பி.ஆர் கலை மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் சர்வதேச தரத்திலான கல்வியை வழங்கும் விதமாக ஈசி லிங்க் அகாடமியுடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு நடைபெற்றது..
கோவை அரசூர் பகுதியில் செயல்பட்டு வரும் கே.பி.ஆர்.கல்வி குழுமம் தனது கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் கல்வி திறன்களை வளர்க்கும் விதமாக தேசிய,சர்வதேச அளவிலான பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்தி உள்ளனர்..
இதன் தொடர்ச்சியாக சர்வதேச தரத்திலான கல்வி மற்றும் தொழில் திறன்களை மாணவர்களுக்கு வழங்கும் விதமாக ஈஸி லிங்க் அகாடமியுடன் கேபிஆர் கலை மற்றும் ஆராய்ச்சி கல்லூரி ஒரு குறிப்பிடத்தக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது..
கே.பி.ஆர்.கல்வி குழுமங்களின் தலைவர் கே.பி.ராமசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,அயர்லாந்து நாட்டில் உள்ள கிரிஃபித் கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவர் பேராசிரியர் டியர்முயிட் ஹெகார்டி,மற்றும் அட்மிசன் இயக்குனர் தீபக் லூத்ரா ஆகியோர் கலந்து கொண்டு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு கே.பி.ஆர்.கல்வி நிறுவனங்களுடனான தங்களது பயணத்தை உறுதி செய்தனர்..
இந்நிகழ்வில் ஈசி லிங்க் அகாடமியின் நிர்வாக இயக்குனரும் சர்வதேச சான்றளிக்கப்பட்ட தொழில் பயிற்சியாளரும் ஆன சோனி அக்காரா முன்னிலை வகித்தார்…
இது குறித்து சிறப்பு விருந்தினர்கள் கூறுகையில்,கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு சர்வதேச கல்வி மற்றும் தொழில் முறைகள் முன்னணி ஆலோசனை மற்றும் பயிற்சி மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சியும் இதன் வாயிலாக நடைபெற உள்ளதாக தெரிவித்தனர்..
இதனால் உலகளாவிய கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்த தகவல்களை மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ள இயலும் என தெரிவித்தனர்…