தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளை அண்மையில் அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பின் மூலம் வெளியிடப்பட்டார்.
இந்நிலையில் அக்கட்சியின் புதிய மாவட்ட நிர்வாகிகளுக்கான அறிமுக கூட்டம் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் கூட்டரங்கில் இன்று (மார்ச்-19) நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் சிவக்குமார் தொண்டர்கள் மத்தியில் நிர்வாகிகளான மாவட்ட இணைச்செயலாளர் ரேகா ராஜேந்திரன்,பொருளாளராக முத்தமிழ் செல்வன்,மாவட்ட துணைச்செயலாளர்களாக சசிகுமார்,ஈஸ்வரன் உள்ளிட்டோரை அறிமுகம் செய்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் வரும் 2026 ல் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்யை முதல்வராக ஆக்குவதே எங்கள் இலக்கு அதற்கான பணிகளை மேற்கொள்வோம் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட,ஒன்றிய,நகர,கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.