தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர். ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் விதிகளை மீறும் தொழில் சங்க பொறுப்பாளர்கள் மற்றும் பணியாளர்களை, கண்டு கொள்ளாத கிளை மேலாளர் விசாரணை செய்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் ஜான்சன் கோரிக்கை.
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக தஞ்சாவூர் கிளையில் இருந்து சுமார் 35-க்கும் மேற்பட்ட விரைவு பேருந்துகளையும் மற்றும் சொகுசு பேருந்துகளையும் பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கி வருகின்றனர். இங்கு உள்ள பேருந்துகளை சுத்தம் செய்து கழுவிடும் பணிகளை தனியார் ஒப்பந்த நிறுவனம் எடுத்துள்ளது.
பேருந்து சுத்தம் செய்து கழுவிட இந்த கிளையில் உள்ள மின்சாரம் பயன்படுத்தப்படும் அதற்கு மாதம் தோறும் மின் கட்டணம் அரசு செலுத்தி வருகிறது. கடந்த சில வருடங்களாக அரசு விரைவு போக்குவரத்து தஞ்சாவூர் கிளை பணி மனையில் தொழில் நுட்ப பிரிவில் பணியாற்ற கூடிய ஆளும் திமுக தொழிற் சங்கத்தை சார்ந்த நிர்வாகிகள் அவர்களது வாகனம் மற்றும் பணிக்கு தொடர்பு இல்லாத வெளி நபர்களின் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இந்த வளாகத்தில் வைத்து அரசு மின்சாரத்தை பயன்படுத்தி விதிகளை மீறி சுத்தம் செய்து வருகின்றனர்.
இங்கு கிளை மேலாளராக பணியாற்றி வரும் அலுவலரும் கண்டு கொள்வது இல்லை. இது குறித்து கடந்த 9.11.2024 அன்று முதல்வரின் முகவரிக்கு புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த புகார் மனுவிற்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்து விசாரணை செய்யப்பட்டதில் சம்மந்தப்பட்ட விரைவு போக்குவரத்து கழக கிளையில் புகாரில் குறிப்பிட்டது
போன்ற சம்பவங்கள் நடைபெற வில்லை என்று நிர்வாகத்திற்கு ஆதரவாக விதி மீறல்களை மறைத்து பொய்யான விபரங்களை போக்குவரத்து அலுவலர்கள் அளித்து உள்ளனர். இந்த அரசுக்கு பொருளாதார இழப்பீடு, விதி மீறல்களை திமுக தொழிற் சங்க நிர்வாகிகள் மற்றும் பொருப்பாளர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். ஆகவே விதிகளை மீறி செயல்பட்ட நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதாரங்களும் உள்ளது.
மேலும் தனது காட்டுப்பட்டில் உள்ள கிளையில் நடக்கும் அத்துமீற ல்களை கண்டு கொள்ளாமல் அலட்சியமாக செயல்பட்டு அரசுக்கு மின்சார மூலம் இழப்பு ஏற்படுத்திய கிளை மேலாளர் மீது விசாரணை செய்ய வேண்டியும் இப் பொதுநல கோரிக்கை மனு மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்து என்று அந்த கூறி உள்ளார்.