இலங்கையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் கடத்தி வந்த 64 அரிய வகை உயிரினங்களை சுங்கத் துறை யினர் பறிமுதல் செய்தனர்.
இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மதுரை வந்தடைந்தது. விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை யினர் சோதனையிட்டனர். அப்போது வேலூரை சேர்ந்த பயணி ஒருவர் கொண்டு வந்த பெட்டியில் அரிய வகை ஆமைகள் 52, அரிய வகை பல்லிகள் 4, குட்டி பாம்பு கள் 8 என 64 அரிய வகை சிறு உயிரினங்கள் இருந் தது தெரியவந்தது. இந்த உயிரினங்கள் அனைத்தும் இந்திய வனத்துறையின் பாதுகாப்பு பட்டியலில் உள்ளவை ஆகும். இவற்றை கடத்துவது சட்டப்படி குற்றமாகும்.
இதையடுத்து சுங்கத் துறையினர் அந்த பயணியிடம் விசாரித்த னர். அப்போது அவர், “இலங்கையில் இருந்து புறப்பட்ட போது, ஒரு நபர் என்னிடம் வந்து இந்த பெட்டியை கொடுத்தார்.பெட்டியில் சாக்லெட் உள்ளது.
அதை மதுரை விமான நிலைய வாயிலில் இருக்கும் நபரிடம் கொடுத்து விடுங்கள் என கூறினார்” என்று தெரிவித்தார். இதை யடுத்து அந்த பயணி மீது வழக்குப்பதிந்த சுங்கத் துறை யினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரிய வகை உயிரினங்கள் அனைத்தும் இந்திய வன விலங்கு சட்டப்படி நீதிமன்றம் மூலம் வனத்துறை யினரிடம் ஒப்படைக்கப்பட்டது.