தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரத்தில் அஇஅதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் திரளான அதிமுகவினர் மற்றும் இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம்:
அதிமுக சார்பில் ஆண்டுதோறும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, தொடர்ந்து நடந்து வருகிறது. ஜெயலலிதா வழியில் இந்த ஆண்டும், அதிமுக சார்பில் தாராபுரம் ஜின்னா மைதானம் பகுதியில்
இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில் திருப்பூர் அஇஅதிமுக கிழக்கு மாவட்ட சார்பில் தாராபுரம் நகரச் செயலாளர் சி.ஆர். ராஜேந்திரன் தலைமை வகித்தார்.இதில் எஸ் டி பி ஐ கட்சி மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் திரளாக கலந்து கொண்டனர்.
ரமலான் நோன்பு பற்றி பேசும்போது
இஸ்லாமியர்களுக்குரிய 12 மாதங்களில் 9 வது மாதமான ரமலான் மாதம் மிகவும் நன்மைக்குரியதாகும். இதில் இஸ்லாமிய மார்க்க வழிகாட்டி திருக்குர்ஆன்.
இந்த மாதத்தில் இறைவன் நோன்பு நோற்பதைக் கட்டாயமாக்கியுள்ளார். 14 மணி நேரம் பசித்திருந்து, விழித்திருந்து, ஒவ்வொருவரும் தன்னை புடம்போட்டு தூய்மைப்படுத்தி, அதன் மூலம் மனித சமுதாயத்துக்குப் பல்வேறு நன்மைகளை வழங்குகிறார்கள்.
இதன் மூலம் பசித்திருப்பதால் ஏழ்மையின் வழி உணரப்பட்டு ஏழைகளுக்கும், வறியவர், அநாதை, என்று தேவையுள்ளவர்களைத் தேடிச் சென்று உதவிக்கரம் நீட்டுவதை நோன்பு கற்றுக் கொடுக்கிறது.
ரமலான் நோன்பின் மூலம் சமூதாய சமரசத் திட்டத்தைக் கற்றுத்தரும் ரமலான் நோன்பைப் புரிந்து முழு உலகிலும் சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி அமைதிப் பூங்காவாக ஒன்றிணைந்து வாழ்வாங்கு வாழ்வோமாக என இவ்வாறு தெரிவித்தார்.