கோவை சிங்காநல்லூரில் இருந்து பல்லடம் வழியாக போடி செல்லக்கூடிய மதுரை பணிமனைக்கு உட்பட்ட அரசு பேருந்து மாலை6.30 மணி அளவில் பல்லடம் பேருந்து நிலையத்திற்கு வந்தபோது பயணி ஒருவர் வே . கள்ளிப்பாளையத்தில் இறங்க வேண்டுமென்று நடத்துனரிடம் கேட்டுள்ளார்.

அங்கெல்லாம் பேருந்து நிக்காது என்றும் நடத்துனர் அந்த பயணியை கீழே இறக்கி விட்டார். இதனிடையே அங்கிருந்த நபர் இதை செல்போனில் வீடியோ பதிவு செய்தார். இதை கண்ட நடத்துனர் உடனடியாக பெருந்தில் இருந்து இறங்கி ஓடி வந்து செல்போனில் வீடியோ எடுத்த நபரிடம் மன்னிப்பு கேட்டு தெரியாமல் இறக்கி விட்டு விட்டதாகவும் இனி இது போல் நடக்காது என மன்னிப்பு கேட்டு கதறும் வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி .வருகிறது

மேலும் வே கள்ளிப்பாளையம் பகுதியில் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என விதிகள் இருந்தாலும் சில அரசு பேருந்து நடத்துனர்கள் மற்றும் நடத்துனர்கள் பயணிகளை ஏற்றாமல் செல்வதாகவும் இதனால் பணிக்கு செல்வோர்க்கு பள்ளிக்கு செல்வோரும் பாதிப்படைவதாகவும் வீடியோ காட்சிகளில் வரும் நடத்துனர்& ஓட்டுநர் மீது தமிழ்நாடு குடிமை பொருள் மற்றும் மேல் முறையீட்டு ஒழுங்கு நடவடிக்கை விதியின் கேள் நடவடிக்கை எடுக்குமாறு மதுரை போக்குவரத்து கழக பணிமனை மேலாளருக்கு அப்பகுதி மக்கள் புகார் அனுப்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *