திருவெற்றியூர். மார்ச். 28
திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோடை வெயிலை சமாளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்த உதவி ஆணையர்.
அருள்மிகு தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் திருக்கோவிலில் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.
வெயிலின் தாக்கத்தை சமாளிக்க திருக்கோயில் வளாகத்தில் கேன்களில் தண்ணீர் வைத்தும் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது .
கோவில் உதவி ஆணையர் நற்சோனை மற்றும் கோவில் அலுவலர்கள் ஒன்றிணைந்து சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது இதனை சென்னை மாநகராட்சி ஒன்னாவது மண்டல குழு தலைவர் தி மு தனியரசு வந்திருந்த பக்தர்களுக்கு நீர் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து பக்தர்கள் கோவில் வளாகத்தில் சுற்றி வந்து சுவாமி தரிசனம் செய்வதற்காக நடைபாதை தரைப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் குளிரூட்டும் பெயிண்ட் பூசியும் அதே போன்று சில இடங்களில் தேங்காய் நார் நடைபாதை மேட் போடப்பட்டது இதில் பக்தர்கள் கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து சன்னதியில் சென்று சாமி தரிசனம் செய்வதற்காக இது போன்ற ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.
காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணி வரை தரைப்பகுதி சூடாக இருக்கும் நிலையில் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்வதற்காக இதுபோன்ற ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.
இது பக்தர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது