தஞ்சாவூர்,
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை சார்பில் நவசக்தி குழும நிறுவனர் டாக்டர் மணிரத்தினம் நிறுவியுள்ள அறிவுலக மாமேதை அண்ணல் அம்பேத்கர் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு நடைபெற்றது.
விழாவிற்கு துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் பாரத ஜோதி தலைமை வகித்தார். தமிழ்ப் பல்கலைக்கழக பதிவாளர் (பொ) கோ. பன்னீர்செல்வம் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக மதுரை கருமாத்தூர் அருள் ஆனந்தா கல்லூரி தமிழ்த்துறை தலைவர் குருசாமி அம்பேத்கர் அடிப்படைத் தத்துவங்கள் பற்றி குறித்து விளக்கி பேசினார். முன்னதாக விளாவிக்கு வருகை தந்த அனைவரையும் அயல்நாட்டுத் தமிழ்த் கல்வித்துறைத் பேராசிரியர் முனைவர் இரா குறிஞ்சி வேந்தன் வரவேற்றார். முடிவில் இணை பேராசிரியர் பழனிவேலு நன்றி கூறினார்.
