தேனி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு தேனி மாவட்டம் கூத்து அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
தமிழ்நாடு முழுவதும் மாணவ மாணவிகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று வெள்ளிக்கிழமை 28.03.2025 தொடங்கி அடுத்த ஏப்ரல் மாதம் 15.04.2025 வரை நடைபெற உள்ளது தேனி மாவட்டத்தில் மொத்தம் 199 பள்ளிகளைச் சேர்ந்த 6979 மாணவர்களும் 7191 மாணவிகளும் மற்றும் 290 தனித்தேவர்கள் என மொத்தம் 14460 தேர்வர்களுக்கு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத நுழைவு சீட்டு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டிருந்தது இந்த நடைபெற்ற தேர்வில் 6860 மாணவர்கள் 7117 மாணவிகளும் மற்றும் 268 தனித்தேர்வர்கள் என மொத்தம் 14425 தேர்தலில் 68 தேர்வு மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதினார்கள் இந்த தேர்வு பணிகளில் 1116 தேர்வு கண்காணிப்பாளர்களும் 107 பறக்கும் படை அலுவலர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் கோட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு வினாத்தாள்கள் வழங்ப்பட்ட நேரம் மற்றும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மைய கண்காணிப்பாளர்களிடம் கேட்டு அறிந்ததோடு தேர்வு கட்டுப்பாட்டு அறையினையும் பார்வையிட்டார். மேலும் தேர்வுக் கட்டுப்பாடு மையங்களில் இருந்து தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்களை கொண்டு செல்லவும் மீள வினாத்தாள்களை தேர்வு மையங்களில் இருந்து வைத்தால் விடைத்தாள் சேகரிப்பு மையத்திற்கு கொண்டு செல்லும் வாகனங்கள் மற்றும் விடைத்தாள் சேகரிப்பு மையத்திற்கும் 24 மணி நேரமும் காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனரா என்று துறை அலுவலர்களிடம் கே ட்டறிந்தார். இந்த ஆய்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி பள்ளி இருபால் ஆசிரியர்கள் உடனிருந்தனர்