இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில், கமுதி நம்மாழ்வார் வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் ஊரக வேளாண் அனுபவ பயிற்சியின் கீழ் கால்நடை மருத்துவர் அரவிந்தன் தலைமையில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
இம்முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி மற்றும் குடற்புழு நீக்கம் செய்யப்பட்டது.இதில் ஊர் மக்கள் அனைவரும் தங்களது கால்நடைகளுடன் வந்து கலந்து கொண்டு பயன்பெற்றனர்.