தேனி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 28 ஆவது கல்லூரி ஆண்டு விழா தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வடபுதுப்பட்டியில் அமைந்துள்ள தேனி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 21 ஆவது கல்லூரி ஆண்டு விழா கர்மவீரர் காமராஜர் கலையரங்கில் நடைபெற்றது
தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவரும் நாடார் சரஸ்வதி கல்வி குழுமத்தின் தலைவருமான கல்வித்தந்தை டி ராஜ மோகன் தலைமை வகித்தார் கல்லூரியின் செயலாளர் கே எஸ் காசி பிரபு அனைவரையும் வரவேற்று பேசினார்
உப தலைவர் பி பி கணேஷ் பொதுச் செயலாளர் எம்.எம். ஆனந்த வேல் மற்றும் பொருளாளர் எம் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கல்லூரியின் C.oE முனைவர் ஏ. சரண்யா கல்லூரி மலரின் சுவடுகளுக்கான முகப்புரையை சமர்ப்பித்தார் 28 ஆம் ஆண்டு கல்லூரி மலரினை கல்வித்தந்தை டி ராஜ மோகன் வெளியிட திரைப்பட குணச்சித்திர நடிகரும் நகைச்சுவை நடிகருக்கான நடிகர் கலைமாமணி முனைவர் வி.டி.எம் சார்லி மலரை பெற்று க் கொண்டு சிறப்பித்தார்.
கல்லூரி முதல்வர் முனைவர் எஸ் சித்ரா நடப்பு கல்வியாண்டிற்க்கான ஆண்டறிக்கையினை சமர்ப்பித்தார் கல்லூரி அகடாமிக் டீன் முனைவர் ஏ.கோமதி கல்லூரி தன்னாசி பெற்றதற்கான அறிக்கையை வாசித்து சமர்ப்பித்தார்
கல்லூரி C.oE முனிவர் ஏ.சரண்யா தன்னாட்சி மூலம் நடத்திய தேர்வுக்கான அறிக்கையை வாசித்து சிறப்பித்தார் கல்லூரியின் இணைச் செயலாளர்கள் எம் அருண் ஏ எஸ் எஸ் செண்பகராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் சிறப்பு விருந்தினராக திரைப்பட குணச்சித்திர நடிகர் வி டி எம் சார்லி சிறப்புரை ஆற்றினார் . கல்லூரியின் துணை முதல்வர் சுசீலா சங்கர் நன்றி கூறினார்