கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்: 98 42 42 75 20.
பல்லடம் அருகே பட்டுக்கோட்டையில் இருந்து கோவை நோக்கி சென்ற தனியார் ஆம்புலன்ஸ் சாலையோரமாக நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் மோதி பயங்கர விபத்து ஒருவர் பலி ஓட்டுநர் உட்பட நான்கு பேர் படுகாயம்-பல்லடம் போலீசார் விசாரணை……
பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் முருகன் 65. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவர் மனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த நாச்சியார் என்பவருக்கு சொந்தமான தனியார் ஆம்புலன்ஸ் ஒன்றின் மூலம் கோவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட நிலையில் ஆம்புலன்ஸ் வாகனத்தை விஜய் மற்றும் கவியரசன் ஆகிய இரண்டு பேர் இயக்கி வந்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது ஆம்புலன்ஸ் வேன் பல்லடம் அடுத்த பெரும்பாலி பகுதியை கடக்க முயன்றுள்ளது.
அப்போது ஆம்புலன்சை கவியரசு என்பவர் இயக்கியதாக கூறப்படும் நிலையில் முன்னாள் சாலையோரமாக நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டிறந்த ஆம்புலன்ஸ் பலமாகமோதியுள்ளது. இதில் கோவை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் ஆம்புலன்ஸில் உடன் சென்ற பவிதா, கல்யாணி மற்றும் ஓட்டுநர்கள் விஜய், கவியரசன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கி கிடந்த ஓட்டுனர் கவியரசை தீயணைப்புத்துறையினர் மூலம் பத்திரமாக மீட்டனர்.
மேலும் அவர்கள் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் மேலும் இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.