இரா.பாலசுந்தரம்-செய்தியாளர்,திருவாரூர்
திருவாரூர் காமாட்சி அம்மன் ஆலய கும்பாபிஷேகம்
திருவாரூர் துர்காலயா ரோட்டில் உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு காமாட்சி அம்மன் அருள்மிகு அழகீஸ்வரர் மற்றும் அருள்மிகு வரப்பிரசாத அம்மன் ஆலய அஷ்ட பந்தன கும்பாபிஷேகமானது கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட யாகசாலையில் 08.04.2025 செவ்வாய்க்கிழமை முதல் யாகசாலையில் கணபதி ஹோமம், மகாலட்சுமி கோமம் மஹாயாகங்கள் நடைபெற்று,
காலை மங்கல இசை பராயணங்களுடன் நான்காம் கால பூஜை ஆரம்பித்து காமாட்சி அம்மனுக்கு பிரதான பிரதிஷ்டை , சங்கல்பம் பூர்ணாஹுதி தீபாரணை நடைபெற்று பின் கலச புறப்பாடு தொடங்கி சரியாக 10.15 மணிக்கு விமான கும்பாபிஷேகம் அதனை தொடர்ந்து தொடர்ந்து மூலவர் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விஸ்வகர்மா சமூகத்திற்கு சொந்தமான இக்கோயில் திருவாரூர் விஸ்வகர்மா சங்கத்தினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்று மதியம் 12 மணிக்கு அன்னதானமும்,எஜமான உற்சவமும் மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம் அதனை தொடர்ந்து அம்மன் வீதியுலா புறப்பாடும் நடைபெற உள்ளது.