எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி அருகே தென்னாலக்குடியில் அடுத்த அடுத்து நான்கு ஆலய கும்பாபிஷேகங்கள் ஏராளமான பக்தர்கள் பங்கேற்ற சுவாமி தரிசனம் செய்தனர் :-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்னலைக்குடி கிராமத்தில் ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர், அருள்மிகு ஸ்ரீ தென்குடி ஈஸ்வரர், ஸ்ரீ மகாகாளியம்மன் ஆலயம் ஆகியவை அமைந்துள்ளது. ஆலயங்களில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
யாகசாலையில் புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து சிறப்பு யாகங்கள் நடைபெற்றன. இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்தது இதனைத் தொடர்ந்து மகா பூர்ணாகுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கோபுர கலசங்களுக்கு ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை எடுத்து மூலவர்களுக்கு சிறப்பு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.