முன்னாள் படை வீரர்கள் தொழில் தொடங்க கடன் உதவி மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல் ஓய்வு பெற்ற முன்னாள் படை வீரர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும் முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது இதன்படி தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் இந்தத் திட்டத்தில் முன்னாள் படை வீரர் கைம்பெண் முதன்மை விண்ணப்பதாராகவும் அவர்களது 25 வயதுக்கு மேற்பட்ட ஒரு மகள் கூட்டாண்மை அடிப்படையில் அவர்களுடன் இணைந்து விண்ணப்பிக்கலாம்
முன்னாள் படை வீரர்ரைச் சார்ந்தோர் முன்னாள் படை வீரரின் மறுமணம் ஆகாத கைம் பெண்கள் இராணுவ பணியின் போது உயிரிழந்த படை வீரர்களின் கைம்பெண்கள் மற்றும் முன்னாள் படை வீரரைச் சார்ந்துள்ள திருமணமாகாத அல்லது கை ம்பெண் மகள்கள் திட்டத்தின் வாயிலாக இந்தத் திட்டத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்
மேலும் இந்த திட்டத்தின் கீழ் தகுதியற்ற பட்டியலில் உள்ள தொழில்களாக தெரிவிக்கப்பட்டிருந்த அனைத்து வகையான வர்த்தக நடவடிக்கைகள் போன்ற தொழில்களும் செய்திட தற்போது விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிக்க படைவிலகல் சான்று மற்றும் அடையாள அட்டை அசல் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ என்ன புகைப்படம் 1 எஸ்.எஸ். எல். சி. மதிப்பெண் சான்று அசல் மற்றும் ஆதார் அட்டை அசல் பிறப்பால் தமிழ்நாட்டைச் சார்ந்தவர் என்பதற்கான வருவாய் துறையின் சான்று அசல் வேலைவாய்ப்பின்மை சான்று தேவைப்படின் ப்ராஜெக்ட் ரிப்போர்ட் லேண்ட் டாக்குமெண்ட் கொட்டேஷன் தேவைப்படின் ஆகிய ஆவணங்களுடன் exwel.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 15 4 2025 செவ்வாய்க்கிழமைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் மேலும் விவரங்களுக்கு தேனி மாவட்ட முன்னாள் படை வீரர்கள் நல உதவி இயக்குனர் அலுவலக தொலைபேசி எண் 04546.252185 இன்று லேண்ட் லைன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார் இந்த தகவலை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் இரா நல்லதம்பி தெரிவித்தார்