அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் சட்டமேதை அம்பேத்கரின் 134 வது பிறந்தநாள் விழா.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில்
இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் தலைமையில்
ஆர்.எஸ்.யுவராஜ் அயலக அணி துணை அமைப்பாளர் எஸ்.விஸ்வநாதன் ஏற்பாட்டில்
சட்டமேதை அம்பேத்கர் அவர்களின் 134 வது பிறந்தநாள் விழாநடைபெற்றது.
அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கரின்
திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
பின்னர் கேக் வெட்டி குளிர்சாதன பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கியும்
அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இதில் திமுக கட்சி நிர்வாகிகள் ரவி,கலைமணி மாதவன்,பிரசாந்த் உமாபதி,நாகப்பன் குணால்,மோகன்ராஜ் திவாகர்,விநாயகமூர்த்தி விக்ரம்,ஆல்வின்,ஐயப்பன்,கிஷோர்
இளவரசன்,அஜித் வினோத் உட்பட திமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்