தேனி மாவட்டம் போடி கிழக்கு ஒன்றியம் போடி அருகே உள்ள பெருமாள் கவுண்டன்பட்டியில் வருடம் தோறும் நடைபெறும் கிராம மக்களின் பிரசித்தி பெற்ற ஊர் திருவிழாவில் பங்கேற்ற தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பரிவட்டம் கட்டியும் சிறப்பு கும்பம் மரியாதை அளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது
மேலும் இத்திருவிழாவில் அன்னதானத்திற்காக தனது பங்களிப்பாக தன்னுடைய சொந்த பணத்தில் இருந்து ரூபாய் 5000 வழங்கியும் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற மனதார வாழ்த்தினார்.
உடன் பூதிப்புரம் பேரூர் திமுக செயலாளர் பேரூராட்சி மன்ற தலைவருமான கவியரசு பால்பாண்டியன் உள்ளிட்ட கோவில் நிர்வாகிகள் கிராம கமிட்டி உறுப்பினர்கள் ஒன்றிய பேரூர் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்