தெலுங்குபாளையம் பகுதியில் துவங்கப்பட்டுள்ள புதிய வீட்டுமனை விற்பனை திட்ட துவக்க விழாவில் பிரபல நடிகை சுஜிதா மற்றும் நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ்.பி.அன்பரசன் ஆகியோர் பங்கேற்பு
கோவையில் ரியல் எஸ்டேட் துறையில் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ள நிறுவனமான ஃபேர்ஃபீல்டு ஷெல்டர்ஸ் நிறுவனம் தற்போது அனைவரும் வாங்கக் கூடிய விலையில் பிரீமியம் வீட்டுமனையிடங்களை கொண்ட ‘வாகை’ என்னும் லேஅவுட்டினை கோவை. தெலுங்குபாளையத்தில் (பெருமாள் கோவில் பின்புறம்) அறிமுகம் செய்துள்ளனர்..
இதற்கான அறிமுக விழா ஃபேர்ஃபீல்டு ஷெல்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் முத்துக்குமார் மற்றும் தங்கராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது..
இதில் நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் எஸ்.பி.அன்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு லே அவுட் விற்பனை திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார்..
கவுரவ அழைப்பாளராக திரை நட்சத்திரம் சுஜிதா கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றினார்…
கோவையின் முக்கிய பகுதிகளான பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம், காந்தி பார்க்,புரூக் ஃபீல்டு மால், இரயில் நிலையம், உக்கடம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளின் அருகே வாகை லேஅவுட் அமைந்துள்ளது…
DTCP மற்றும் RERA அங்கீகாரம் பெற்றுள்ள இந்த லேஅவுட்டில் வீட்டுமனை வாங்குவோருக்கு 8 கிராம் தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படுகிறது.
வங்கிக் கடன் வசதியுடன் உடனே வீடு கட்டி குடியேறுவதற்கு தயார் நிலையில் உள்ள இந்த லேஅவுட்டில் பிரம்மாண்டமான வரவேற்பு வளைவு, ஒவ்வொரு வீட்டுமனைக்கும் தனித்தனியே தண்ணீர் குழாய் இணைப்பு, மின்சார இணைப்பு, கழிவுநீர் வடிகால் வசதி, தெரு விளக்குகள், சி.சி.டி.வி.கேமரா மற்றும் அகலமான தார்சாலைகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது குறிப்படதக்கது..