தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உத்தரவுப்படி தண்ணீர் பந்தல்

தமிழக வெற்றி கழகத்தின் நிறுவன தலைவர் நடிகர் விஜய் உத்தரவின்படி தமிழகம் முழுவதும் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு கோடை காலத்தில் பொது மக்களுக்கு உதவுமாறு உத்தரவிட்டிருந்தார்
அதன்படி தமிழகம் முழுவதும் தமிழக வெற்றி கழகத்தினர் நீர் மோர் பந்தலை திறந்து வருகின்றனர் இந்த நிலையில் ஏற்கனவே தூத்துக்குடி நகர நிர்வாகி ஆனந்தகுமார் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தலை திறந்து உள்ளார்
இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக நகர நிர்வாகி ஆனந்தகுமார் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார் அப்போது அங்கு இருந்த பொதுமக்களுக்கு தர்பூசணி. மோர். மற்றும் குளிர்பானங்களை ஆனந்தகுமார் வழங்கினார்
இந்த நிகழ்ச்சியில் கதிர். சந்தன ராஜ். மகேஸ்வரன். ஷாம். அதிபன். சரவணா. சுமித்ரா. கனி. மகேஷ். சுஜிதா அபர்ணா உள்ளிட்ட தமிழக வெற்றிக்கழகத்தினர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
மேலும் ஆனந்தகுமார் கூறுகையில் எங்களது தலைவர் உத்தரவுபடி தூத்துக்குடி மாநகரில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது தொடர்ந்து மேலும் பல இடங்களில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு கோடை காலம் முழுவதும் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்படும் என்று ஆனந்தகுமார் கூறினார்