காஞ்சி சங்கர மடம் தனக்கென ஒரு வரலாற்றைக் கொண்டிருக்கிறது. இந்த மடத்தின் குரு பரம்பரையின் துவக்கமாகக் கருதப்படும் ஆதி சங்கரர், 2500 வருடங்களுக்கு முன்பாக, அதாவது கி.மு. 509ஆம் ஆண்டில் பிறந்ததாகவும் தனது இறுதிக் காலத்தை காஞ்சிபுரத்தில் கழித்து, முக்தியடைந்ததாகவும் காஞ்சி காமகோடி மடத்தின் வரலாறு தெரிவிக்கிறது. காஞ்சி மடத்தை கி.மு. 482 நிறுவியதாகவும் கூறுகிறது.
1907ல் இந்த மடத்தின் 68வது மடாதிபதியாக ஸ்ரீ சந்திரசேகரேந்திரர் தன் 13வது வயதில் மடாதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் தனக்கு அடுத்த மடாதிபதியாக 1954ல் ஜெயேந்திர சரஸ்வதியை நியமித்தார். இதற்குப் பிறகு 1983ல் சங்கர விஜயேந்திர சரஸ்வதியை தனக்கு அடுத்த மடாதிபதியாக ஜெயேந்திரர் நியமித்தார்
மூன்று மடாதிபதிகள் இருந்த ஒரே மடம் சங்கர மடம் என பிரபலமாக இருந்து வந்தது,
காஞ்சி சங்கர மடத்தின், 69வது மடாதிபதியான ஜெயேந்திரர், வயோதிகம் காரணமாக, உடல்நலக்குறைவால், கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 28ல் காஞ்சிபுரத்தில் முக்தியடைந்தார். சங்கர மடத்தில், அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் இளைய மடாதிபதியான விஜயேந்திரர் 70வது சங்கர மடத்தின் மடாதிபதியாக பொறுப்பேற்று கொண்டார்,
தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு காஞ்சி சங்கர மடத்தில் 71ஆவது மடாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது, ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி சங்கர மடத்தில் பதவியேற்பு விழா நடைபெறுவதாகவும் அதற்கு வருகை புரிவதற்காக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு அழைப்பு விடுக்க மடத்தின் மேலாளர் சுந்தரேசன் ஐயர் இன்று வருகை தந்த போது தெரிவித்தார்.