திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில்,
திருவாரூர் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்
திருவாரூர் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் தலைமையிலான அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தண்டவாளங்கள் பராமரிப்பு குறித்தும், சிக்னல் விளக்குகள் பராமரிப்பு குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து தண்டவாளங்களில் உள்ள பாயிண்ட்ஸ் மற்றும் கிராசிங் லெவல் குறித்து ஆய்வு மேற்கொண்டார். திருவாரூர் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். அடுத்த வாரத்தில் மீண்டும் திருவாரூருக்கு ஆய்வுக்கு வருவதாகவும் அதற்குள் பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார்.
திருவாரூருக்கு திடீர் ஆய்வுக்கு வருகை தந்த தென்னக ரயில்வே கோட்ட மேலாளரை திருவாரூர் மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு சார்பில் வரவேற்று, கோடைகால சிறப்பு ரயில்கள் அதிக அளவில் இயக்க வேண்டும், அகஸ்தியம்பள்ளியிலிருந்து சென்னைக்கு ரயில் இயக்க வேண்டும், காரைக்காலில் இருந்து ராமேஸ்வரம் சிறப்பு ரயில் இயக்க வேண்டும், தினசரி இயங்கும் டெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்திட வேண்டும், சுகாதார அமைப்புகளை மேம்படுத்திட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனு அளிக்கப்பட்டது