திருவெற்றியூர்.

மணலி மண்டலம், 22 வது வார்டில் காங்கிரஸ் கட்சி கவுன்சிலராக தீர்த்தி உள்ளார். இவருக்கு அலுவலகம் இல்லாததால், மக்கள் பணி மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. ஒரு முறை, தற்காலிக கவுன்சிலர் கட்டடத்தின், கண்ணாடி ஜன்னல்கள் உடைக்கப்பட்டு, கம்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் திருடு போயின.


எனவே, புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என, கவுன்சிலர் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி, ஒரு கோடி ரூபாய் செலவில், முதல் தளத்துடன் கூடிய புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை காலை நடந்தது.


மணலி, சின்னசேக்காடு – தேவராஜன் தெருவில், நடைபெற்ற விழாவில், திருவொற்றியூர் தி.மு.க., எம்.எல்.ஏ., சங்கர், மணலி மண்டல குழு தலைவர் ஆறுமுகம், கவுன்சிலர் தீர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்று, அடிக்கல் நாட்டினர்.
இந்நிகழ்ச்சியில், பொறுப்பு மண்டல உதவி கமிஷனர் தேவேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *