திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரத்தில் உழவர் சந்தை விவசாயிகளுக்கும், தரைக்கடை வியாபாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் காலையில் விவசாயிகள் உழவர் சந்தயில் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
மேலும் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்த காய்கறிகளை தரையில் போட்டு அமர்ந்து தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம்
தாராபுரத்தில் உழவர் சந்தை விவசாயிகளுக்கும், தரைக்கடை வியாபாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால்
இன்று காலையில் விவசாயிகள் உழவர் சந்தையில் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டது.
தாராபுரம் அண்ணா நகரில் அமைந்துள்ள உழவர் சந்தை.இதில் தாராபுரம் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள் காலை 4 மணி முதல் காய்களை கொண்டு வந்து விவசாயிகளுக்கு அவர் உரிய இடத்தில் அமர்ந்து வியாபாரம் செய்து வந்தனர்.இவர்களுக்கு போட்டியாக தரைக் கடை வியாபாரிகளும் உழவர் சந்தை அருகே உள்ள பொள்ளாச்சி சாலையில் சாலையோர கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
விவசாயிகள் தெரிவிக்கியில்
தாங்கள் கொண்டுவரும் காய்கறிகளில் பாதி காய்கறிகளை கொண்டு சென்று மாடுகளுக்கு போடுவதாக குற்றம் சாட்டி வேளாண்மை துறை உதவி இயக்குனர் வெங்கடாசலம் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
.தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியும் விவசாயிகள் கேட்கவில்லை.இந்த பிரச்சனைக்கு தீர்வு காணகடந்த மாதம் தாராபுரம் ஆர்.டி.ஓ திரவியம் தலைமையில் ஆர்.டி.ஓ விவசாயிகள் மற்றும் தரக்கடை வியாபாரிகள் ஆகியோருடன் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அதில் சாலையோர கடை வியாபாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக தெரிவித்து அதிகாரிகள் ஒரு மாதத்திற்குள் தற்காலிக கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
ஆனால் சாலையோர வியாபாரிகள் அவ்வாறு செய்யாமல் தொடர்ந்து கடையை நடத்தி வந்தனர்.தற்போதுசாலையோர கடை வியாபாரிகள் தெரிவிக்கையில்:-
நாங்கள் உழவர் சந்தை அருகே வியாபாரம் செய்வது எங்களது தாராபுரம் தினசரி மார்க்கெட்டில் அமைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றிவிட்டு தற்பொழுது வணிக வளாகம் கட்டி வருவதாலும் தாங்கள்அரசின் விதிப்படி சாலை ஓரங்களில் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகிறோம் என கூறினர்.
இதனை உழவர் சந்தை விவசாயிகள் ஏற்க மறுத்தனர் அதன் பிறகு விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பொள்ளாச்சி சாலையில் அமைத்திருந்த தரைக் கடை வியாபாரிகள் தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு சிலர் சென்றனர்.
இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் தாராபுரம் உழவர் சந்தையில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் உழவர் சந்தைக்கு நாள்தோறும் காய்கறி வாங்க வரும் வெளியூர் கிராமப்புற மளிகை கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர்.
பொதுமக்களில் பலர் இவர்களது போராட்டத்தால் உழவர் சந்தை வந்துவிட்டு காய்கறி கிடைக்காமல் திரும்பிச் சென்றனர் இதனால் இன்று காலை 8- மணி வரை உழவர் சந்தையில் நடைபெற இருந்த வியாபாரம் சுமார் 80 லட்சம் மதிப்பிலான காய்கறிகள் தேக்கமடைந்தன.