பிளஸ் 2 தேர்வில் தென்காசி மாவட்டத்தில் தென்காசி குத்துக்கல் வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி மா.கார்த்திகா 600க்கு 595 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.

தென்காசி மாவட்டம் தென்காசி குத்துக்கல் வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய 144 மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. இப்பள்ளி மாணவி மா.கார்த்திகா 600க்கு 595 மதிப்பெண்கள் பெற்று பள்ளி மற்றும் தென்காசி மாவட்டத்தில் முதலிடம் பெற்றார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு, தமிழ் 98, ஆங்கிலம் 98, இயற்பியல் 100, வேதியியல் 99, கணிதம் 100, கணினி அறிவியல் 100.மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இப்பள்ளி மாணவி பெ.கிறிஸ்டினா ஜேன் 591 மதிப்பெண்கள் பெற்று பள்ளி இரண்டாமிடமும், மாணவி க அருணா நாயகி 587 பெற்று பள்ளி மூன்றாமிடமும் பெற்றனர்.

மேலும் கணினி அறிவியலில் 6 பேரும், கணிதத்தில் 2பேரும், இயற்பியல் வேதியியல், கணக்குப்பதிவியல், வணிகவியல் மற்றும் கணினிப்பயன்பாடு பாடத்தில் தலா ஒருவரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றனர்.

சாதனை படைத்த, வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான க.திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, கேம்பிரிட்ஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் இராபர்ட் பெல்லார்மின், முதன்மை முதல்வர் ஆனி மெடில்டா. கேம்பிரிட்ஜ் இண்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளி இயக்குநர் ஜோசப் லியாண்டர், ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தி.பிராக்ளின் பால் சுசி மற்றும் ஆசிரிய ஆசிரியைகள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் உட்பட பலரும் பாராட்டினர்.

தென்காசி மாவட்டம் தென்காசி குத்துக்கல் வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் LKG முதல் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *