தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
மூலனூர்:வடுகபட்டி சிவன் கோவில் மின் கசிவால் தீ விபத்து – பந்தல் எரிந்து சேதம்.
மூலனூர் அருகே வடுகபட்டி சிவன் கோவிலில் சித்ரா பௌர்ணமிக்கு போட்ட பந்தல் முற்றிலும் எரிந்து சேதம் ஆனது.இதில் 2- லட்சம் மதிப்பிலான பந்தல் மற்றும் அலங்கார நைட்டுகள் தீயில் எரிந்து கருகி நாசமானது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள மூலனூர் வடுகபட்டி சிவன் கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தென்னை மட்டைகளால் பின்னிய பந்தல் கோயில் முழுவதும் போடப்பட்டிருந்தது.இதில் திடீரென ஏற்பட்ட தீ” விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
வடுகபட்டி சிவன் கோவிலில் திடீர் தீ” விபத்தால் கோவிலின் உட்பகுதியில் போடப்பட்டிருந்த 2- லட்சம் மதிப்புள்ள பந்தல் சாமானங்கள் மற்றும் அலங்கார லைட்டுகள் முற்றிலும் இருந்து சேதமானது. தீ’ விபத்து ஏற்படும் பொழுது கோவிலில் யாரும் இல்லாததால் உயிர் சேதங்கள் இன்றி தவிர்க்கப்பட்டது.
மேலும் கோவிலின் முன்பகுதியில் பெண் ஒருவர் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது கோவிலில் திடீரென தீ’பற்றி எரிவதை கண்டு அலறியடித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்தார். பிறகு ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி குடங்களில் தண்ணீரை எடுத்து ஊற்றி அணைக்க முயன்றனர் ஆனால் தீ’ மல மல வென அடுத்தடுத்து பந்தல்களுக்கு தீ” பரவியது.
தீயை கட்டுப்படுத்த முடியாமல் பொதுமக்கள் தினரினர். அதன் பிறகு தாராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு அலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் தாராபுரத்தில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனத்துடன் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதற்குள் 90 சதவீத பந்தல்கள் எரிந்து சேதம் ஆனது தீயணைப்பு துறையினர் மீதமுள்ள 10% தீயினை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தாராபுரத்தில் இருந்து 25-கிலோமீட்டர் தொலைவில் மூலனூர் வடுகபட்டி அமைந்துள்ளதால் தாராபுரம் பகுதியில் இருந்து தீயணைப்பு துறையினர் வருவதற்கு தாமதம் ஏற்பட்டது.எனவே மூலனூரில் தீயணைப்பு நிலைய அலுவலகம் ஒன்று அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த தீ விபத்திற்கு முதல் காரணம் மின்கசிவாக இருக்கும் என தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் மூலனூர் போலீசார் தீ’ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த விபத்தில் 2- லட்சம் மதிப்பிலான பந்தல் சாமான்கள் மற்றும் மின்விளக்குகள் முற்றிலும் எரிந்து சேதமானது.