கமுதி,
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த
ஏராளமானோர் வீர ஜக்கதேவி ஆலய வழிபாட்டிற்கு ஜோதி ஏந்தி சென்றனர்.
சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் வருடா வருடம் சித்திரை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள வீரஜக்கதேவி ஆலயத்தில் பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.

இதனை நினைவு கூறும் பொருட்டு கமுதி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான நராயணபுரம், பாம்புல் நாயக்கன்பட்டி, உடைகுளம், தலைவ நாயக்கன்பட்டி, பெரியஉடப்பங்குளம், கீழராமநதி, கிளாமரம், கீழவலசை, சேதுராஜபுரம் உட்பட பல்வேறு கிராமங்களில் வசித்து வரும் அவரது சமுதாய மக்களான இராஜ கம்பள நாயக்கர் உறவின் முறை சார்ந்த மக்கள் நேற்று சித்திரை கடைசி வெள்ளிக்கிழமை தங்கள் பகுதியில் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, மேள தாளங்களுடன் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கினர். பின்னர் கமுதி – கோட்டைமேட்டில் உள்ள
ஜக்கம்மாள் கோவிலில் இருந்து ஜோதி ஏந்தி புறப்பட்டனர்.

இந்த ஜோதி ஓட்டத்தை திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ துவக்கி வைத்தார். அவருடன் வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன்,ஒன்றிய பொருளாளர் நாராயணபுரம் முத்து, ஒன்றிய கவுன்சிலர் முத்துக்கிளி மற்றும் இராஜகம்பளநாயக்கர் உறவின்முறை நிர்வாகிகள், திமுக கட்சியினர் கலந்து கொண்டனர்.

பின்னர் ஜோதி ஏந்தி 1000 க்கும் மேற்பட்டோர் பாஞ்சாலங்குறிச்சி
சென்று வீரஜக்கதேவி ஆலய வழிபாடு நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *