கரூர் செய்தியாளர் மரியான் பாபு


கரூர் பசுபதி பாளையம் பகுதியில் மண்டல குழு தலைவர் கோல்டு ஸ்பாட் ராஜா தலைமையில் . திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க கூட்டம்.
கரூர் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட திமுக செயலாளருமான வி செந்தில் பாலாஜி பங்கேற்று சிறப்புரையாற்றினார். தமிழ்நாட்டில் திமுக அரசு கொண்டு வந்த எண்ணற்ற திட்டங்கள் காலை உணவு திட்டம் உலகத்தில் இருக்கக்கூடிய மற்ற நாடுகளுக்கு வழிகாட்டக்கூடிய ஒரு சிறப்பு திட்டமாக காலை உணவு திட்டத்தை நான் முதலமைச்சர் தொடங்கிய செயல்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்

அரசு பள்ளியிலே படிக்கின்ற அரசு உதவி என்ற பள்ளியில் தாங்கள் உயர் கல்விக்கு செல்லுகின்ற பொழுது அந்த உயிர்களில் படிக்கக்கூடிய அந்த மாணவிகளுக்கு புதுமைப்பெண் என்ற ஒரு மகத்தான திட்டத்தை தொடங்கி வைத்து மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய இந்த சிறப்பு வாய்ந்த திட்டத்திற்கு 221 கோடி ரூபாய் நிதிகளை கொடுத்து நாலு லட்சத்து 83 ஆயிரம் மாணவிகள் புதுமைப்பெண் திட்டம் மூலமாக மாதம் ஆயிரம் ரூபாய் அதற்கான நிதிகளை பெற்று தங்களுடைய வாழ்விலே உயர்கல்வியை பயிலக்கூடிய வாய்ப்பை உருவாக்கி முதலமைச்சர்
தளபதி என்பதே இன்று மாணவ செல்வங்கள் நன்றி உணர்வோடு எண்ணிப் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் அதேபோல அரசு பள்ளி அரசு உதவி பெறுகின்ற பள்ளியில் படித்திருக்கக்கூடிய மாணவர்கள் உயர்கல்விக்கு செல்லுகின்ற பொழுது அவர்களுக்கு தமிழ் புதல்வன் என்ற ஒரு மகத்தான திட்டத்தை தொடங்கி வைத்து மாதம் ஆயிரம் ரூபாய் பெறக்கூடிய அந்த மாணவ செல்வங்கள் ஏறத்தாழ 3 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் மாதம் ஆயிரம் ரூபாய் அந்த உரிமை தொகையை உதவியும் உயர் கல்வி பெறக்கூடிய ஒரு வாய்ப்பைப் பார்த்து முதலமைச்சர் அவர்கள் உருவாக்கி தந்திருக்கின்றார்கள்

குறிப்பாக வயதானவர்கள் எல்லாம் தங்களுக்கு ஒரு மூட்டு வலி என்று சொன்னால் அரசு மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று சிகிச்சை பெறக்கூடிய சூழலை மாற்றி மக்களை தேடி மருத்துவம் என்ற ஒரு மகத்தான திட்டத்தை வழிகாட்டக்கூடிய சிறப்பு திட்டமாக தமிழ்நாடு முதலமைச்சர்கள் தொடங்கி வைத்து இன்று 2 கோடியே 15 லட்சம் பெரியவர்கள் பயன் பெற்றிருக்கிறார்.

இக்கூட்டத்தில் மாநில நெசவாளர் அணி செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் மாநகர செயலாளர் கனகராஜ் மாநில செயற்குழு உறுப்பினர் காலனி செந்தில் மாவட்ட துணைச் செயலாளர் பூவை ரமேஷ் பாபு, மகேஸ்வரி எம்.எஸ் கருணாநிதி மாமன்ற உறுப்பினர்கள் நகர நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *