பரமக்குடியில் அதிமுக மாவட்ட கழகம் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தகவல் தொழில்நுட்ப பிரிவு, போக்குவரத்து பிரிவு மற்றும் அமைப்பு சாரா ஓட்டுனர் அணி சார்பாக மாபெரும் இரத்ததான முகாம் நடத்துவது தொடர்பாக இராமநாதபுரம் மாவட்ட கழகச் செயலாளர் எம்,ஏ, முனியசாமி அவர்களின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக அம்மா பேரவை இணைச் செயலாளர் எம்,எஸ்,ஆர், ராஜவர்மன், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் நிறைகுலத்தான், அம்மா பேரவை இணைச் செயலாளர் முனியசாமி எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் சுந்தர பாண்டியன் எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ரத்தினம், மாணவர் அணி துணைச் செயலாளர் செந்தில்குமார், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணகுமார் மாவட்ட துணைச் செயலாளர் பாதுஷா மாவட்ட பொருளாளர் குமரவேல், பரமக்குடி நகர கழகச் செயலாளர் ஜமால், முதுகுளத்தூர் நகர துணைச் செயலாளர் குருசாமி மற்றும் ஒன்றிய கழகச் செயலாளர்கள் நகர் கழகச் செயலாளர்கள் பேரூர் கழகச் செயலாளர் சார்பு அணி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அணி பொறுப்பாளர்கள் போக்குவரத்து பிரிவைச் சார்ந்த பொறுப்பாளர்கள் வார்டு கிளைக் கழக செயலாளர்கள் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளன்று நடைபெற உள்ள இரத்ததானம் குறித்து துண்டு பிரசுரத்தை பொதுமக்களிடம் வழங்கினர்.