ராமநாதபுரம் மாவட்டம்
சாயல்குடி பேரூராட்சியில் இராமநாதபுரம் மாவட்ட கிராமப்புற தொழிலாளர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் அங்கன்வாடி மற்றும் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு தொடர்பான கருத்தரங்கம் ,ஊர்வலம் நடைபெற்றது. சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார், கிராமப்புற தொழிலாளர்கள் மேம்பாட்டு சங்கத்தின் இயக்குனர் சாத்தையா முன்னிலை வகித்தார்,

கடலாடி வட்டார கல்வி அலுவலகத்தின் இளநிலை உதவியாளர் மயில்வாகனன், உதவியாளர் காளிஸ்வரன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் மு.வெள்ளைப்பாண்டியன், அல்லிக்குளம் தொடக்கபள்ளி தலைமையாசிரியர் ஆசிரியர் தனம் ஆகியோர் கலந்து கொண்டு அரசு பள்ளி, அங்கன்வாடி மையங்கள் மூலம் கிடைக்கும் மத்திய மாநில அரசின் திட்டங்கள் பற்றி விரிவாக பேசினார்கள்,

கிராமப்புற மாணவர்கள் அனைவரும் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கான விழிப்புணர்வு தொடர்பான பாதகை எந்தியபடி சாயல்குடி பேருந்து நிலையம் வரை கோஷங்கள் எழுப்பியவாரு ஊர்வலமாக சென்றனர்

இதில் குழந்தைகள் பெற்றோர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் , திரளாக கலந்து கொண்டார்கள். சாயல்குடி காவல்துறை சார்பில் பாதுகாப்பு வழங்கப்பட்டது. முடிவாக களப்பணியாளர் சத்யா நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *